அன்றைய தாஜ்மஹாலும், இன்றையதாஜ்மஹாலும்

முகலாய சக்கரவர்த்தி ஷாஜஹான் ,
மனைவி மும்தாஜ்மீது
அபரிமித காதல் வைத்திருந்தான்
மும்தாஜ் இறந்துவிடுகிறாள்
ஷாஜஹான் துடி துடித்து போகின்றான்
அவள் நினைவில் அவள் கல்லறை மீது
மாபெரும் நினைவாலயம் கட்டிமுடித்தான்
அங்கு தினம் தினம் சென்று மௌனமாய் நின்று
கண்ணீர்வடித்தான் மறைந்த காதலியை நினைத்து'
அதுதான்' தாஜ்மஹால்'

உருண்டோடியது காலம்....முகலாய ஆட்சியையும் போனது
அதற்குப்பின் வந்து நம்மை அடிமையாகிய
ஆங்கில ஏகாதிபத்தியமும் மறைந்தது
சுதந்திர இந்தியாவில் இன்று ஓர்
'உலக பண்பாட்டு பாரம்பரிய ' இடமாக
உலகின் ஏழு அதிசய பொருட்களில் ஒன்றாக
யமுனையாற்றங்கரையில் உள்ளது 'தாஜ்மஹால்'

இன்றைய கால கட்டத்தில் இதே நமது நாட்டில்
மற்றோர்' ஷாஜஹான் ' நேற்று உத்தரபிரதேச
மாநிலத்து,புலந்தர்ஷாஹ்ர் என்ற சிற்றூரில் மறைந்த
ஒரு சாதாரண தபால் அலுவலக ஊழியர் காதிர்
இவர் மனைவி தஜமுள்ளி மீது உயிரே வைத்திருந்தார்;
பாவம் அவள் புற்றுநோய் பாதிக்க சில வருடங்களுக்கு முன்
கால மானார்; காதிர் தன சொத்துக்கள் நிலம் புலன்கள்
பலவற்றை விற்று, தன காதல் மனைவிக்கு
சிமெண்ட், செங்கற்களைக்கொண்டு ஒரு
'தாஜ்மஹால் எழுப்பியுள்ளான்' மனைவியின்
கல்லறைமேல்; மக்கள் இந்த காதல் நினைவு
கட்டிடத்தை இலவசமாய்க் காணட்டும்' என்று
எழுதிவைத்து மறைந்தான்.

இது ஓர் சாதாரண குடியின் மகத்துவ காதல்
எடுத்துரைக்கும் பகட்டிலா 'தாஜ்மஹால்' இதை
மாமன்னன் எழுப்பவில்லை; ஓர் எளியவன்
தன சுய சொத்தால்......................

அறிந்திடுவோமா நாமும் இதை ........
சொல்லுங்களேன் எது தரத்தில் உயர்ந்தது !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Nov-18, 3:14 pm)
பார்வை : 67

மேலே