தன்னம்பிக்கை வளர்
ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.அவன் இளமையாகவும் திடகாத்திரமாகவும் இருந்தான்.இருந்தாலும் பிச்சை எடுத்தே வாழ்ந்து வந்தான்.அப்போது அந்த ஊருக்கு புதிதாக ஒருவர் வந்திருந்தார்.அவரிடம் தான் வைத்திருந்த பிச்சைப் பாத்திரத்தை நீட்டி யாசகம் கேட்டான்.அவர் அவனைப் பார்த்து உழைத்து சாப்பிடக் கூடாதா எனக் கேட்டார்.திடீரென அவன் கையில் இருந்த பிச்சைப்பாத்திரத்தை பிடுங்கி தன் கையில் இருந்த சிறு கத்தியால் கீற ஆரம்பித்தார்.பிச்சைக்காரன் கத்த ஆரம்பித்தான்.இது மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் ஒரு மகான் தந்தது.அதை நாங்கள் பரமபரை பரம்பரையாக பிச்சை எடுக்க பயன்படுத்தி வருகிறோம்.ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என கத்தினான்.அவர் அவன் சொன்னதை எதையும் பொருட்படுத்தாமல் அந்த பாத்திரத்தை தொடர்ந்து கத்தியால் சுரண்டினார்.அப் பாத்திரம் அழகான தங்கபாத்திரமாக ஒளி வீசியது.அவர் இப்பாத்திரம் உங்களுக்கு கிடைத்தவுடன் விற்று பணமாக்கி இருந்தால் உங்கள் தலைமுறையினர் இந்த ஊரிலேயே பெரும் தன வந்தர்களாக இருந்திருப்பார்கள்.இனி மேலாவது இதனை விற்று பிழைத்துக் கொள் என்றார்.
நீதி: நம் மனதின் சக்தியையும், தன்னம்பிக்கையையும் நாம் வளர்த்து கொள்ள வேண்டும்