புறப்படு புரட்சி விதையோடு

பட்டு வண்ண சிட்டு
பாடி மகிழ்ந்திடும்
வானம்பாடி
பொய் புரட்டு அறியா
பொம்மை நீ
வாய்மையாய்
நாளும் முழுநிலவாய்
நாணிலத்தில்
வாழு
நாட்டை காத்திடும்
தூணாய்
ஒளிர்ந்திடு
எண்ணங்களுக்கு
வண்ணம் தீட்டி ஏணியாய்
உயர்ந்திடு
இமயம் தொட்டு விடும் தூரம்தான்
இமைக்கா விழியோடு
இருந்திடு
தாய் பாடிய தாலாட்டில்
தமிழோடு வீரமும்
கலந்திருக்கும்
பகைவரை கண்டால்
பகவலனாய்
ஆர்த்தெழு
படிப்பு வாழ்க்கைக்கானது
பயம் கொள்ளாதே முன்னேறி
வந்திடு
அறிவுப்பசி கொண்டால்
அகிலமே உன்
காலடியில்
உழைப்பின் வியர்வை துளிகள்
உனக்கான பாதையை
காட்டும்
அகண்ட கடலுக்கு
வானமும்
வசப்படும்
உன் கண்ணசைவுக்கு
உலகமே
வசப்படும்
வா வாழ்ந்து காட்டு
வாழ்க்கை
உனக்கானது
பூமி உனக்கானது
புறப்படு புரட்சி
விதையோடு!!!