பெரியதில் பெரியது
தொண்டு, வேண்டுவோருக்கு பெரிது
தோரணை, பார்வைக்கு பெரிது
தொன்மை, தேடுவோருக்கு பெரிது
தொய்வில் உதவுவோர் பெரிதினும் பெரிது
அஞ்சுவோருக்கு, அச்சமே நஞ்சு
ஆளுவோருக்கு, கேட்போர் நஞ்சு
இல்லறத்திற்கு, இனிமை இல்லாமை நஞ்சு
ஊழலுக்கு, கேளாமையே நஞ்சு
பெரிதினும் பெரியதை காண
பேராசையை அறுத்தல் வேண்டும்.
நஞ்சுக்கு நஞ்சைத் தர
நன்மைகளை மட்டுமே எண்ண வேண்டும்.
.. _ நன்னாடன்