தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு மெய் உறக்கம் கவிஞர் இரா இரவி
தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு !
மெய் உறக்கம்! கவிஞர் இரா .இரவி !
மெய் உறக்கம் உறங்கி வருடங்களாகி விட்டன !
பொய் உறக்கம் உறங்கி பொழுது கழிகின்றது !
தொலைக்காட்சி வந்து தூக்கம் தொலைந்தது
தொல்லைக்காட்சியானது தொலைக்காட்சி !
தொடர்களுக்கு அடிமையாகி விட்டனர் நாளும்
தொடர்கின்றது இரவில் நெடுநேர விழிப்பு !
தொடர்களில் எதிர்மறை சிந்தனை போதிப்பு
தொலைந்து விடுகிறது நிம்மதியான உறக்கம் !
கெட்ட சிந்தனை நாளும் விதைக்கின்றனர்
கேட்ட காரணத்தால் போனது உறக்கம் !
இரவு உறக்கத்தை இல்லாமல் ஆக்கியது
இளசுகளோ கைபேசியில் மூழ்கியது !
அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல
அலைபேசியும் நஞ்சு உணர்ந்திட வேண்டும் !
கணினியும் கண்களுக்கு இன்று கேடானது
கண்ட நேரம் நேரத்தை விழுங்கி விடுகிறது !
நாளும் அறிவியல் கண்டுபிடிப்பால்
நன்மையை விட தீமை அதிகமானது !
அன்று இல்லை தூக்கம் இன்மை
இன்று உள்ளது தூக்கம் இன்மை !
அன்று அதிகாலை எழுந்தனர் பலரும்
அதிகாலை எழுவது இல்லை என்றானது !
கோழித் தூக்கம் மனிதத் தூக்கம் ஆனது
கண்கள் காணவில்லை மெய் உறக்கம்!