சோலைக் குயிலே காலைக் கதிரே - மத்யமாவதி
பொண்ணு ஊருக்குப் புதுசு (1979) திரைப்படத்தில் நடிகை சரிதா நடிக்க, எம்.ஜி.வல்லவன் எழுதி, இளையராஜா இசையமைப்பில் எஸ்.பி.ஷைலஜா மத்யமாவதி ராகத்தில் பாடும் ஒரு அருமையான பாடல் ‘சோலை குயிலே காலை கதிரே’
சோலைக் குயிலே காலைக் கதிரே
அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே. (சோலை)
வண்ண தேன் கழனி காலைக்கு வாழ்த்து பாடுதே
சின்ன பூங்குருவி நாளைக்கும் சேர்த்து தேடுதே
அசைவில் இசையில் கன்னித் தமிழே
வாடையில் ஆடிடும் கோடையின் நீரலை
மேடையின் மீது கண்ணாலே கவி பாடி
பொன் வண்ண மீனாடுதே ஓஓஓஓஒ . (சோலை)
முல்லை மாலைகளை சூடிடும் வெள்ளி மேகங்கள்
நெல்லுப் பானைகளை சுமக்கும் கன்னி கோலங்கள்
அசைவில் இசையில் கன்னித் தமிழே
செங்கதிர் சிந்திடும் சித்திரை பங்குனி
திங்களில் நாளில் மந்தாரை செந்தாழம்
வந்தாடும் ஊர்கோலமே ஓஓஓஓஒ . (சோலை)
Solai Kuyile Kaalai Kathire - High Quality - சோலை குயிலே காலை கதிரே - Ponnu Oorukku Puthusu என்று யு ட்யூபில் பதிந்து இப்பாடலைக் கேட்கலாம்.