என்ன அழகுஎத்தனை அழகு
என்ன அழகு....எத்தனை அழகு....
"காலத்தால் மூப்படைந்த என்னவளே
காவியத்தால் முத்தத்தினை எனக்கீந்தவளே
உயிராய் உலகில் வலமானாய்
மெய்யாய் புவிதனில் வளமானாய்
குறிலும் நெடிலும் நின்குரலானது
மாத்திரையால் நித்திரையும் வசமானது
வல்லினமே உனக்குக் கழுத்தழகு
மெல்லினமே உனக்கு மூக்கழகு
இடையினமே உனக்கு இதயமழகு
தமிழே நீ என்ன அழகு....எத்தனை அழகு...."
"காதலையும் கனியவைத்து இலக்கியமானவளே
கருத்தினையும் நுழையவைத்து இலக்கணமானவளே
கவிதையைக் கண்ணிமையாகத் தீட்டினாய்
கதையினை இதழுக்கு வண்ணம்பூசினாய்
முதலும் சார்பும் நின்மொழியானது
சித்திரை வெப்பமும் நின்விழியானது
அசையாலே அசைந்து வந்தாய்
இசையாலே தவழ்ந்து வந்தாய்
ஆசையாலே என் நாவில் உலாவந்தாய்
தமிழே நீ என்ன அழகு....எத்தனை அழகு...."