இயற்கையே எல்லாம்

இயற்கையே எல்லாம்
*************************************************

யாக்கை உறுவதும் அழிவதும் இயற்கை
பருக்கை அளிக்கும் பயிர் அதும் இயற்கை
வாழ்க்கை அரங்கினில் படுக்கையும் இயற்கை
படுக்க இடுகையில் கிடக்கையும் இயற்கை
ஒடுக்கையும் நடுக்கையும் உடல் கைக்கு இயற்கை
உடற்கை உதிர்கையில் மறு பிறக்கை இயற்கை
இடிக்கையில் தோன்றிடும் கொடிமின்னல் இயற்கை
பெண்கைப் பொன்நகைக்கு புன்னகையோ இயற்கை
உறைக்கஉறைக்க கந்தத்தின் வாசமும் இயற்கை
உரைக்கும் சந்தத்தில் நற்கவிதை இயற்கை
உடுக்கை சிவபதியின் வெண்பனியும் இயற்கையே

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Nov-18, 7:31 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 75

மேலே