அப்புனா சப்புனா

ஏன்டி பொன்மணி, எப்படி அமெரிக்காவிலிருந்து வந்த?
@#
நானும் என் கணவரும் கொழந்தைகளும் நம்ம ஊருக்கு வந்து ரண்டு வாரம் ஆகுது பாட்டிம்மா.
@#
என்ன அநியாம்டி இது. உங்கப்பன் வீடு கூப்பிடு தூரத்தில இருக்குது. இந்தப் பெரிய பாட்டிய வந்து பாக்க உனக்கு ரண்டு வாரம் தேவைப்படுதா?
@#
என்ன மன்னிச்சுக்குங்க பாட்டிம்மா. அந்த சனியன்பிடிச்ச டெங்கு காய்ச்சல் வந்து தொலைச்சிருச்சு. இன்னும் சரியா நடக்கக்கூட முடியல. உங்களப் பாக்காம என்னால இருக்கு முடியல. அதுதான் எம் பொண்ணுங்கள அழச்சிட்டு உங்களப் பாக்க வந்தேன்.
@#
அட இவுங்க ரண்டு பேரும் உன்னோட ரட்டப் பொண்ணுங்களா?
@#
ஆமாம் பாட்டிம்மா.
@#
அடியே ராசாத்திங்களா? அழகுன்னா அழகுடி ரண்டு செல்லங்களும். உங்க பேருங்களச் சொல்லுங்கடி.
@#
எம் பேரு அப்னா. இவ போரு சப்னா.
@#
ஏன்டி பொன்மணி, என்ன பேருங்கடி இந்தப் பேருங்க. அப்புனா, சப்புனா.
நல்லவா இருக்குது இந்த மாதிரி பேருங்க. ரண்டு பேருக்கும் தமிழ்ப் பேருங்கள வச்சிருக்கலாமே. சரி எதுக்கு இந்தப் பேருங்கள வச்சீங்க?
@#
ரட்டைக் கொழந்தைங்க. ரண்டு பேருக்கும் ஒரே அர்த்தம் வர்ற பேருங்களா தேடிபிடிச்சு வச்சோம் பாட்டிம்மா. இப்பெல்லாம் யாரும் பெத்த பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேரை வைக்கிறதில்ல. இந்திப் பேருங்கள வைக்கிறது தான் நாகரிகம். நம்ம பாட்டிக்காட்டிலகூட தமிழப் பேருள்ள ஒரு கொழந்தையைக்கூடப் பாக்கமுடில. நாங்க அமெரிக்காவில இருக்கறவங்க. அப்புனா சப்புனான்னு சொல்லக்கூடாதுங்க பாட்டிம்மா. அப்னா. சப்னா.
@#
ஏன்டி உனக்கே தெரியும் இந்திப் பேரை எல்லாம் என்னால சரியாச் சொல்லமுடியாதுன்னு. சரி. சரி. எல்லாங் காலம் கெட்டுக் கெடக்குதடி.
தாய் மொழில பேரு வச்சாக் கேவலமா? தாய வச்சுக் காப்பாத்தத் துப்பில்லாம பசங்க வெளிநாட்டிலயே தங்கிக்கிறாங்க. தாய் தகப்பன் இங்க முதியோர் இல்லத்துக்குப் போறாங்களாம். இவுனுகளுக்கெல்லாம் வெக்கமா இல்லை.
@#
காலம் மாறிப் போச்சுங்க பாட்டிம்மா.
@#
நாசமாப் போச்சு போ
@#
சரி. அப்புனா. சப்புனா. என்னடி அர்த்தம்?
@#
ரண்டு பேருங்களுக்கும் ஒரே அர்த்தம் 'கனவு'
■■■■■■◆■◆■■◆■◆◆■■■■◆◆◆◆◆◆◆◆

Apna = dream
Sapna = dream

எழுதியவர் : மலர் (16-Nov-18, 11:37 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 168

மேலே