குடில் தேடி வந்திடுவார்
நாண(ந)யம் உள்ள
நல்ல மனிதர்போல்
நடிக்கும் இவரிடம்
நேர்மை இருப்பதில்லை
பொதுநலம் குறித்து
பொழுதெல்லாம் பேசுமிவர்
பத்திரமா சுயநலத்தை
பேணி காத்திடுவார்
பண்பு நிறைந்தவர்,
படித்தவரென்றாலும்
பணத்துக்காக
பேயாய் அலைந்திடுவார்
காந்தியத்தை நாளும்
கடைபிடிப்பதாய்க்
கூறும் இவர்
கள்ளத்தொழிலும் செய்திடுவார்
பரிவு காட்டுவதுபோல்
பாசம் பொழிவார்
பலன் இல்லையென்றால்
பாழும் கிணற்றிலும் தள்ளிடுவார்
சாதாரண மனிதர் நான்
சட்டத்தை மதிப்பவரென
சொல்லுவார்
சத்தியத்தை புதைத்திடுவார்
கொள்கைக்குக்
குரல் கொடுப்பார்—பணம்
கொடுத்தால்
காற்றில் பறக்க விடுவார்
மக்களின் குறை தீர்க்க
மணு கொடுக்க சொல்வார்—கொடுத்து
மாதங்கள் பல கடந்தாலும்
மௌனம் காத்திடுவார்
காணுமிடமெங்கும்
காட்சி தரும் பெருமகனார்
கழுத்து மாலையோடு—ஒரு நாள்
குடில் தேடி வந்திடுவார்.