உடன் பிறப்பு அண்ணா தம்பி

உன்னை கருவறையில் சுமக்கும் வரம் கேட்டேன்
அழும் போது ஆறுதலாய் உன்னை கேட்டேன்
என் தவறுகளில் உன் பாச சண்டை கேட்டேன்
நான் கைகோர்த்து நடந்திட உன் விரல்கள் கேட்டேன்
நான் தலை சாய்த்து உறங்கிட உன் மடி கேட்டேன்
என் சந்தோஷத்தில் தென்றலாய் உன் சுவாசம் கேட்டேன்
கனவிலும் உன் முகம் பார்க்கும் வேண்டுதல் வைத்தேன்
உன் சோகத்தில் சுகமான காற்றாய் என்னை கேட்டேன்
அன்னை தெரிகிறாள் உன்னை பார்க்கையில்
அப்பனும் தோற்றான் உன் அரவணைப்பில்
காதலன் வேண்டாம் என் கண்ணீரில்
கணவன் வந்தாலும் கைவிட்டு போகாதே
நீ விலகினால் நான் நொறுங்கி போவேன் என் உயிர் உடன் பிறப்பே ......

எழுதியவர் : ஹேமாவதி (18-Nov-18, 8:09 pm)
சேர்த்தது : hemavathi
பார்வை : 717

மேலே