யாவும் சிவமே

யாவும் சிவமே, எதுவும் சிவமே..!!
ஊனும் சிவமே..!! உயிரும் சிவமே..!!
தந்தை சிவமே, தாயும் சிவமே..!!
உணர்வோடு கலந்த உறவுகளும் சிவமே..!!
நட்பும் சிவமே..!! துரோகமும் சிவமே..!!
கோபம் சிவமே..!! கொஞ்சும் குணமும் சிவமே..!!
நோயும் சிவமே..!!
அது தீர்க்கும் மருந்தும் சிவமே..!!
காட்சிகள் சிவமே..!! கானலும் சிவமே..!!
கருணையும் சிவமே..!!
வன்மமும் சிவமே..!!
வஞ்சம் சிவமே, வஞ்சம் தீர்க்கும் நெஞ்சமும் சிவமே..!!
பிறப்பு சிவமே..!! இறப்பும் சிவமே..!!
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நிகழும், எதுவும் சிவமே..!!
நீரும் சிவமே..!! நெருப்பும் சிவமே..!!
நிழலும் சிவமே..!! நிஜமும் சிவமே..!!
காணும் எதிலும் சிவமேயன்றி, பிறிதொன்றும் யான் அறியேனே..!!

எழுதியவர் : பொருள் செல்வி சிவசங்கர் (18-Nov-18, 11:52 pm)
பார்வை : 123

மேலே