அவள்

தீட்டப் படாத ஓவியம்
எழுதப் படாத கவிதை
வர்ணிக்க படாத சிலை
மீட்டப் படாத வீணை
தேன் எடுக்காத மலர்
வெளி வராத கண்ணீர்
வலையில் சிக்காத மீன்
சுவைக்காத கனி
ஒற்றை நிற வானவில்
ஓடாத வெண் மேகம்
கரை படாத நிலவு
கூவாத குயில்
ஆடாத மயில்
கை படாத காரிகை
கற்பனை நிறைந்த கனவுகள்
கனவுகளைச் சுமக்கும் கண்கள்
கவிஞன் காணாத காவியம் – அவள் (சிற்பியின் சிந்தனையில் இருக்கும் சிலை )
--கயல்

எழுதியவர் : kayal (18-Nov-18, 11:12 am)
சேர்த்தது : கயல்
Tanglish : aval
பார்வை : 524

மேலே