இனியாழ்

என்
அழகு களஞ்சியமே...
என்
அழகு பட்டே....
என்
மகிழ்ச்சியின் புதையலே..
என்
கொஞ்சும் மொழியே...
என்
கற்பனையின் நிஜமே...
என்
முத்தத்தின் முகவரியே..
என்
அசையும் சிலையே...
என்
ஓயா இசையே...
என்
சங்கீத சிணுங்களே...
என்
குட்டி கவியே...
என்
இனியவளே
என்
இனியாழே...
நிலாவை தாங்கும்
பிறையை போல
நானும்
உன்னை தாங்குவேனே..❣

எழுதியவர் : தாரா (18-Nov-18, 5:13 pm)
சேர்த்தது : தாரா
பார்வை : 1296

மேலே