ஐம்புலனும் உனைக் காண
காதல் வார்த்தைகளை
கண்ணால் சொன்னவளே
கேளா மொழிகளுக்கு
அர்த்தம் தந்தவளே
ஆடும் இதயத்தினுள்
உன் ஆசை ஆடுதடி
அனுதினமும் உன் நினைப்பு
அணு உலையை மூட்டுதடி
கவிப் பாட எத்தனித்தால்
கருத்தெல்லாம் சிதறதடி
ஐம்புலனும் உனைக் காண
ஆற்றலில் துடிக்குதடி
நேற்றைய பொழுதோடு
என்ஜென்மம் முடிந்ததடி
உனைக்கண்ட இன்று முதல்
புதுப்பிறப்பு எடுத்தேனடி
தென்பெண்ணெய் ஆறு போலே
புதுவெண்ணெயில் பூத்த பூவே
என்னை தவிக்க விட்டது போதும் இனி
தடுத்தாட்கொள்ள வருவாயோ !
- நன்னாடன்