காதல் செய்வீர்

கற்பைப் போல் நெறியானதோ காதல் _ இல்லை
கத்தி மேல் நடப்பது போன்றதோ
சிந்தைக்கு விருந்து படைப்பதோ - இல்லை
சிதைவை பதிவு செய்வதோ
சீரிளமையோடு நம்மை வைப்பதுவோ - இல்லை
சினமான வாழ்க்கைத் தருவதோ
மன்னவனாய் மாற்றிவிடுவதோ - இல்லை
மண்ணில் மறைய வைப்பதோ
வானளவு உயர்ச்சி செய்வதோ - இல்லை
வறுமையில் உழல வைப்பதோ
என்றாலும் காதல் செய்வீர் இனிமையாய்
காலம் பதிலளிக்கும் புதுமையாய்
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (20-Nov-18, 9:28 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : kaadhal seiveer
பார்வை : 92

மேலே