நாய் வளர்ப்பது குற்றமா

யார் யாரோ எதை எதையோ வளர்க்குறாங்க,
நாம ஒரு நாய் வளர்த்தால் பொறுப்பதில்லை அண்டை வீட்டுக்காரர்களுக்கு.

என்னப்பா நாய் வளர்க்கிற? ராத்திரியெல்லாம் குரைக்கிறது.
அக்கம்பக்கத்துல தூங்கனுமா?
வேண்டாமா?
என்ற வண்ணம் தாக்குகிறார்கள் வார்த்தைகளை ஏவுகணைகளாக்கி.

இன்னும் சிலர் ஒருபடி மேலே போய்,
உன் நாய் என் மாட்டு மடு காம்பைக் கடித்துவிட்டது,
மாடு நிற்கவே மாட்டேங்கிறது.
இதெல்லாம் கள்ளியில் கட்டித் தூக்காமல் இன்னும் ஏன் வளர்க்கிற? என்று சண்டைக்கு வருகிறார்கள் இன்னும் சில ஏக வசனங்கள் சேர.

இதோடு நின்றதா?
உன் நாய் என் வீட்டுக்குள் வந்து சோற்றுப்பானையை உருட்டிவிட்டது.
என் கிளியை பிடிச்சுத் தின்னுடுச்சு.
இரண்டு புறா, நான்கு விடைக்கொழிகளைப் பிடிச்சு தின்னுடுச்சு என்ற வண்ணம் புகார்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

எனக்கு தெரியும்,
என் நாய் அப்படிச் சேட்டைகள் செய்யக்கூடியதில்லை என்று.
சற்று மெலிந்தே காணப்படும் என் நாய் என் வீட்டில் மிகவும் அமைதியாகவே படுத்திருக்கும்.
இரவு நேரங்களில் எங்கள் வீட்டோடு சேர்த்து அண்டை வீடுகளையும் பாதுகாக்கும்.
பூனையைக் கூட பிடிப்பதில்லை.
தனக்கிட்ட உணவை பறவைகள் தின்ன வேடிக்கை பார்க்கும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-Nov-18, 10:29 pm)
பார்வை : 1332

மேலே