மழையோடு இரவு பயணம்

இருள் சூழ்ந்த பாதை அது.
மேகம் தூறிக் கொண்டிருந்தது.
மிதிவண்டியை வேகமாக முடுக்கி கொண்டு சென்றேன்,
மரங்களுக்கிடையே.

மரமொன்று சொன்னது இந்த மனிதனை பாருங்கள்,
சிறு தூறலுக்கே பயந்தோடுகிறான் என்று.
என் காதில் விழ வேகம் குறைத்தேன்,
மின்னலொன்று பளிச் பளிச் என்று அவ்விடம் பகலாக்கியது.
அடுத்த சில நொடிகளில் பெரும் சத்தத்தோடு இடியொன்று முழக்கியது,
தன்னிச்சையாக கால்கள் வேகமாக இயங்கத் தொடங்கின.

வீட்டை அடைய வேண்டும்,
இந்த கூட்டை காக்க வேண்டுமென
பய உணர்வால் சுய காக்க மூளை எச்சரிக்கிறது.
என் மிதிவண்டியின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க மழையின் வேகமும் காற்றின் வேகமும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

பாதையோ குண்டும் குழியுமாக மேடு பள்ளங்களுக்கு பஞ்சமில்லாமல்
இருக்க மிதிவண்டியை நிலை தடுமாறாமல் செலுத்துவதில் கவனமாயிருந்தேன்.
வேற எதையும் நான் சிந்திக்கவில்லை.

மழை என்னை குளுர குளுர அபிஷேகம் செய்ய,
பாதையில் இருந்த பள்ளமும் மேடும் சமமாக மழைநீரானது நிரம்பி ஓடியது.
கரண்டைக்கால் அளவிற்குமேல் நீர் அதிகரிக்க, மிதிவண்டியை முடுக்குவது கடினமாயிக் கொண்டே போனது.
மனபயம் அதிகரிக்க மருந்தாக ஓம் நமச்சிவாய என்று உச்சரித்துக் கொண்டே வீடு வந்தடைந்தேன்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-Nov-18, 11:59 am)
பார்வை : 2318

மேலே