வெளிநாட்டுச் சாக்கடை

கொண்டவன் கொண்டதெலாம்
உண்டபின்னும்
கலியுகச்சாணைதனில்
வேற்றொருக்கார் காமம் தீட்டினாய்
அதற்கு பெண்ணியம் பேசி
காதலென்று கண்ணியமாய் நாமம் சூட்டினாய்

பெற்றவனை விற்றெனக்காலும்
உற்றவனை உறவாட உளம்போமோ!
நீ முற்றினை வீற்றிருந்து
வேர்தனை வெளியேற்றலால்
நீர் கொண்டு நின் வாழ
யார் கண்டு அவன் வாழ?

தொட்டில் சிசு முகங்கள் காணாது
தட்டில் இரை முகங்கள் காணாது-ஏதோவொரு
நாட்டில் தத்தளித்து தத்தளித்து
உள்ளம் கொப்புளித்து தந்தவற்றை
நீங்கள் அத்தடித்து அத்தடித்து
நின்னை செத்தொடிப்பதேனோ?

எழுதியவர் : இன்ஸிமாமுல் ஹக் (21-Nov-18, 12:58 pm)
சேர்த்தது : இரையும் அளி
பார்வை : 83

மேலே