அவள் அழகைவிட அழகு - தமிழ் அவளைவிட அழகு
எது தான் அவளினும் அழகு?,
விடியல் காட்டும் அவள் முகம் தான் அழகு..
மீன் போன்ற கண்கள் அழகு..
அந்த இறைவனும் காதல் கொண்ட காரணத்தினாலோ ..
கவிதையாய் உன்னை படைத்தான் ...
தமிழை காதல் செய்த நான் - தமிழுக்காக
கவிதை எழுதி கொண்டுஇருந்த தருணத்தில்..
கவிதையாய் உன்னை கண்டேன்.. உன்னை கண்ட நொடி பொழுதில்
தமிழ் அழகை காட்டிலும் , கவிதை உருவமாய் உள்ள நீயே அழகு என்பதை உணர்ந்தேன்