நடமாடும் இதயம்

தன் கணவன்
வேர்வை நாற்றத்தை
முகர்ந்து தன் உடலோடு
போர்த்தி ரசித்த மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!

அவன் சொன்ன
ஆசை வார்த்தைகளை
தனிமையில் பேசி ரசித்த
மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!

வாசலில் விழி வைத்து
கண்கள் அவனை
கற்பனையில்
தீட்டிக்கொண்டிருக்கும் மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!

கணவன் உண்ணும் போது
அதில் உணவு மீந்து
போகாதா என
பரிமாறும்போது
நினைக்கும் மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!

ஆசை வார்த்தைகள்
கணவன் பேச
எதிர்பார்த்தே எக்கத்தில்
புதையும் மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!

வயிறு நிறைய
உண்டாலும்
கணவன் ஊட்டும்
ஒரு வாய்
சோற்றில் தானே
மனம் நிறையும் எனும்
ஆசையில் மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!

பிள்ளைகள் எத்தனை
பிறந்தாலும்
பிரியம் மட்டும்
நீடிக்க வேண்டும்
மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!

தன் உலகம்
தன் மடியில்
எப்போதும்
சாய்ந்திருக்க வேண்டும்
எனும் கனவில்
எத்தனை எத்தனை மனைவிமார்கள்

கோபமோ குணமோ
கொட்டி தீர்த்தாலும்
கொஞ்சல் மட்டும்
நீடிக்க வேண்டும்
மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!

உறக்கத்தில் அவன்
நெஞ்சில் தலைவைத்து
உறங்க நினைக்கும்
மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!

அவன் தலை கோதி
நெற்றியில் முத்தமிட
ஆசை கொள்ளும்
மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!

தன்னை மட்டுமே
நேசிக்க
தன்னை தினமும்
அழகாக்கிக்கொள்ளூம்
பேராசை மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!

தனிமையில் புகைப்படம்
பார்த்து எப்படா வருவ
என கொஞ்சும்
கொஞ்சுங்கிளிகள்
எத்தனை எத்தனை!

தன் ஆசைகள்
மொத்தமும்
அவனை காப்பதே
என்று
மயக்கம் கொள்ளும்
மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!

சமைக்கும் போது
பின்னால் ஒலிந்து
இடை கில்ல
ஆசைகொள்ளும்
மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!

பத்திக்கிட்டு கோபம்
வந்தாலும்
பத்துபேர் மத்தியில்
பாசமாக பேசும் மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!

ஒளிந்திருந்து ரசிக்கும்
மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!

தன் கையால் மட்டுமே
உண்ண வேண்டும்
தன்னை மட்டுமே
உண்ண வேண்டும்
என்னும் ஏக்கத்தில்
மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!

எழுதியவர் : க. வசந்தமணி (21-Nov-18, 2:45 pm)
Tanglish : nadamaadum ithayam
பார்வை : 416

மேலே