கஜா புயலே

கஜாவோ! காஜாவோ
பெயர் எதுவாயினும் என்ன
பெரும் சேதத்தை ஏற்படுத்தி
சொல்லொணா துயருக்கு ஆளாக்கி
சோகத்தில் ஆழ்த்திவிட்டாய்

வந்தால் சூறாவளியாய்
வருகிறாய்
வறுமையில் உழலும் நாங்கள்
வரவேற்க முடியாமல்
திணறுகிறோம்
வாழ்விழந்து வழியிழந்து வலுவிழந்து துடிக்கிறோம்

வான்னு கூப்பிட
யாருமில்ல
வியர்வை சிந்தி
பட்டபாடெல்லாம் வீணாப் போச்சு
வெள்ளாமை கண்ட வயக்காடும்
மூழ்கிப் போச்சு
குடிசை வீடெல்லாம்
தரைமட்டமாச்சு

அம்மான்னு கூப்பிட்ட
ஆடுமாடெல்லாம்
அநாதையா செத்துப் போச்சு
ஆசைப்பட்டு வளர்த்த மரமெல்லாம்
வேரோடு சாய்ந்து போச்சு
எங்க உதிரமும் துடிக்குது
உசிரும் துடிக்குது

யார் வருவாங்க எவர் வருவாங்க
கரை சேர்க்க
சொல்றதுக்கு எதுவுமில்ல சோத்துக்கு வழியுமில்ல
கையேந்தி நின்னதில்ல
கவலைப் பட்டதில்ல

கால் வயித்து கஞ்சின்னாலும்
கவுரமா குடிச்சோம்
பழைய நிலைமை திரும்புமா
பரிதவிக்கிறோம் நாளும்
விழிகளில் கண்ணீரோடு
விலாசம் இழந்து........

எழுதியவர் : உமாபாரதி (22-Nov-18, 6:28 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 564

மேலே