ஹைக்கூ o0o சொசாந்தி

#ஹைக்கூ

பாதத்தால் முத்தமிட்டார்கள்
பதம் பார்த்தது
கண்ணாடி…!

🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠

குருதி சிந்த வைத்தது
ஏறி மிதித்தவர்களை
ஆயுதமின்றி கண்ணாடி..!

🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠

குத்தாமல் குத்தியது
குத்து விட்டவனை
கண்ணாடி….!

🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠

முகம் காட்டாத கண்ணாடி
முகம் பார்க்கிறது
குப்பைத்தொட்டி..!

🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠

#சொ.சாந்தி

🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠

எழுதியவர் : சொ.சாந்தி (23-Nov-18, 10:06 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 226

மேலே