சிந்தனை சில

அழகின் கர்வம்
ஆழ்துளை கிணற்றில்
போடப்பட்ட ஊசியாக

இனிப்பே (அ) காரமே
நாவில் சில நிமிடங்கள் தான்
இன்பமும் துன்பமும் அது போல்

தீ மீது தீ முட்டினாலும்
எரிய கூடிய பொருள்
உள்ளவரை தான்

வலிகள் தங்கும் இதயங்கள்
உழிகள் தங்கும் கற்சிலை போல்
உயர்வு அடைகிறது

ஒதுக்கப்படும் குப்பைகள் தான்
ஒர் நாள் உயர்ந்து நிற்க்கும்

கஷ்டமும் கணிதமும் ஒன்று
வாழ்வின் இறுதிவரை வரும்

உம் எண்ணங்கள் யாதுவயின்
அதுவே உம் கைவண்ணமாக பெரும்...

இழப்புகள் இழப்பது
இனிதொரு புதுமையை பெறுவதற்கு...

எழுதியவர் : சண்முகவேல் (23-Nov-18, 11:16 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
Tanglish : sinthanai sila
பார்வை : 476

மேலே