அழகை விட அவள் அழகு, அவளை விட தமிழ் அழகு
காலை கதிரவனின் செந்நிற ஒளி அழகு
கதிரவனின் ஒளியில் மிளிரும் அவள் மேனி அழகு.
மழை பொழியும் முன் சூழும் மேகக் கூட்டம் அழகு
அதை ரசிப்பதை காட்டாமல் , ரசிக்கும் அவள் திமிர் அழகு.
முதல் மழையில் கிளம்பும் மண் வாசனை அழகு
அதை மிஞ்சும் அவள் கூந்தல் மணம் அழகு.
விடாத அடைமழை அழகு
அதில் நனையும் அவள் ரசனை அழகு.
சீறிப்பாயும் மின்னல் அழகு
அதைக்கண்டு முகம் மூடும் அவள் பாவனை அழகு.
சூரியனின் வெப்பத்தை குறைக்கும் வெண்ணிலவு அழகு
வெண்ணிலவை குளிரூட்டும் அவள் முகம் அழகு.
மாலைப்பொழுது செங்கதிர் அழகு
அதனுடன் போட்டியிடும் அவள் கண்கள் அழகு.
கோபத்தில் முறைத்தாலும் அழகு
மகிழ்ச்சியில் சிரித்தாலும் அழகு.
அவள் பேசும் மொழியும் அழகு
மொழி தமிழானதால் தமிழும் அழகு.
தமிழை சிறை பிடித்தாலும், அவள் சிணுங்கல் அழகு
மொத்தத்திதில் அவள் பேரழகு .