ஒரு புயல் புரட்சியே

கடக்கும் வரை,
நல்லது நல்லது நல்லது,
கடந்த பிறகு,
கெட்டது கெட்டது கெட்டது,

ஒரு புயல் புரட்சியே,
இருக்குதடா உணர்ச்சியே,
இயலாமை ஒழிக்கவே செய்யடா முயற்சியே,
இயற்கையை ஒழிப்பதே உங்களின் வளர்ச்சியா?

வாழவைப்பதே இயற்கையின் போறுப்பு,
திருப்பி அடித்தால் தாங்காது உங்க பிழைப்பு.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்களை ஏன் வாங்கினாய்?
ஓசோனில் ஓட்டை என்று பின் ஏங்கினாய்,
இயற்கையை அழித்து எதை உருவாக்கினாய்?

ஒரு புயல் புரட்சியே,
இருக்குதடா உணர்ச்சியே,

இயற்கை பேரிடர்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து வந்தாலே,
அழிக்கும் கைகள் அங்கு அழியாதோ?
இயற்கையதும் எழுதும் விதியாலே,
தூய்மை உலகும் தோன்றாதோ?

போதை பானங்கள் தயாரிக்க அங்கங்கு தொழிற்சாலை,
இயற்கையின் வளமும் வாழ்வும் விலை,
அழிந்து கொண்டிருப்பதே இயற்கையின் நிலை,
இயற்கையின் எழுச்சி எங்கும் பரவுகவே.

நெஞ்சிலே உதைக்கிறான்,
மௌனமாய் இருக்கிறது.
நல்லுள்ளங்கள் நலமாய் வாழவே பூமிபந்தும் தாங்குகிறது.

அன்பின் ஆட்சி தான் என்று சாட்சியாய் வாழ்கிறது.
மனிதர்களின் பிரிவினைகளால் பிரிந்தான் கிடக்கிறது.

துரோகங்கள் தாங்கியே துரோகியையும் வாழ வைக்கிறது.
சகலத்திற்கும் சாட்சியான கடவுளாய் வாழ்கிறது.

ஒரு புயல் புரட்சியே,
இருக்குதடா உணர்ச்சியே,
இயலாமையை ஒழிக்கவே செய்யடா முயற்சியே,
இயற்கையை ஒழிப்பதே உங்களின் வளர்ச்சியா?

இயற்கையை அழித்து எதை உருவாக்கினாய்?
எதிர்கால சந்ததியை நோய்களுக்குள் ஆழ்த்தினாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-Nov-18, 5:03 pm)
பார்வை : 4593

மேலே