கார்த்திகை விளக்கு

கார்த்திகை விளக்கு ஏற்றினேன்
காற்றில் ஆடியது தீபம்
ஆடாதே என்றது திரி
ஆடுவேன் என்றது தீபம்
தலையை உள்ளிழுத்தது திரி
தீபம் தானாய் அடங்கியது
அகல் என்னிடம்
ஆணவமே அழிவுதானே
அறியாமல் இத்தரையில்
அநேகர் இதில்
மனிதரென்ன? மற்றவையென்ன?

எழுதியவர் : உமாபாரதி (24-Nov-18, 7:55 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : kaarthikai vilakku
பார்வை : 210

மேலே