நமது வாழ்க்கை
அவசர பயணம்
அவசர குளியல்
அவசர உணவு
அவசர காதல்
அவசர திருமணம்
அவசர தாம்பத்தியம்
அவசர பிரசவம் (சிசெய்ரியன் )
அவசர சிகிச்சை
எல்லாம் அவசரம்
எதிலும் அவசரம்
எல்லோரும் நீடுழி
வாழ்க என்று
வாழ்த்தியது அந்த காலம்
நீ மட்டும்
தனிக்குடித்தனமாக
வாழ்க என்று
வாழ்த்துவது நவீன காலம்
இதுதான் நமது
வாழ்க்கை