ஆட்டோகிராப் என்று புத்தகத்தை நீட்டினேன்
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துக் கொண்டிருந்தாள்
கல்யாணியா காம்போதியா நானறியேன்
தாளம் ஆதியா பாதியா மீதியா நானறியேன்
நகுமோகனலே ...என்று பாடினாள்
நகுமோ மோகனம் என்கிறாளா ....? புரியவில்லையே !!!
இசை நிகழ்ச்சி இனிதே நிறைவேறி முடிந்தது !
உதடசைத்து இசைபாடிய
இளைய எழில் ஓவியம் வெளியே வந்தாள் !
ஆட்டோகிராப் என்று புத்தகத்தை நீட்டினேன்
நகுமோ மோகனம் ....(சிறிது இடைவெளிக்குப் பின்) நன்றாய் இருந்தது என்றேன்
இப்பொழுது தமிழில் சிரித்தாள் !