தொலையாத வார்த்தைகள்
தொலையாத வார்த்தைகள் !
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன்‘ வாடிய வள்ளலார்
வருந்திக் கூறிய வார்த்தைகள்
உலகில் இன்றும் வட்டமிடும்
தொலையாத வார்த்தைகள் !
‘ஆசையே துன்பத்திற்கு காரணம்’
‘அன்புதான் இன்ப ஊற்று’
உண்மை உணர்ந்து புத்தன்
உரைத்த வார்த்தைகள்
தொலைநோக்குப் பார்வைகள்
தொலையாத வார்த்தைகள்!
கம்பன் எழுத்தாணி
பாரதியின் எழுதுகோல்
கண்ணதாசன் பேனாமுனை
சிந்திய கவிதை வரிகள்
கலையாமல் மக்கள் மனதில்
நிலைத்த வார்த்தைகள்
தொலையாத வார்த்தைகள்!
கருத்தொருமித்த காதலர்கள்
கண் இமைகள் பேசிய
மொழிகள் கடந்து பேசும்
அர்த்தங்கள் மாறாத
நிலையான அன்புள்ளங்களின்
தொலையாத வார்த்தைகள் !
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
