விபச்சாரி
சூழ்நிலை எண்ணம் எட்டப்பனால்
கூட்டி கொடுத்த ரகளைச் சோலை !
குருதி ஆறுகளோ மாதமொருமுறை
நரிகளின் பூரல்களோ தினப்பல முறை !
கால மாற்றங்கள் பூமித்தாய்க்கே
வினைச்செயல் மாற்றங்கள் நிகழா பூமிகள் !
விலைகளோ ஆயிரம் லட்சமாய்
வேதனைகளோ நூறாயிரம் கோடியாய் !
மரத்தின் இலைகளை நாங்கள்
காற்று கிழிக்கிறது - பாவம்
கிழிந்தது இலைகள் மட்டுமே !
வெண்மேக வாழ்க்கை
கிழிசல் ஓசோனாய்
இப்போது மானுட பிறவிகளால் !
பறவைகளாய் பறக்க ஆசை
சிறகொடிந்த குயில் - மயில்களாய்
வாழ்க்கை மூங்கில் சிறையில் !
கடல்நீராய் பார்க்கிறார்கள்
ஆற்றிலிருந்து வந்தோம் - என்று
ஏன் புரியவில்லை ! உங்களுக்கு !
எங்களோடு சேர்ந்து விட்டார்கள்
பல பேர் (ஆண் / பெண் )
பட்டமில்லாமல் !