காதல் அழைப்பிதழ்

யாரோ ஒருமுறை என்னை அழைத்தது
ஏனோ என் இதயம் வெளியில் தாவி குதிக்குது
பனி காலங்கள் சிலமணி நேரங்கள்
உந்தன் பார்வை எந்தன் மீது பட்டால் அது போதும்
காதல் அனலாய் அது மாறும்

உன்னை கண்டதும் கம்பன் வரிகள் வந்ததே
ஏனோ எந்தன் நெஞ்சம் முன்னும் பின்னும் உன் பெயர் சொல்லுதே
சுதந்திர காதல்தான் புது சுய சரிதம் எழுதுதே
சுமந்திட நீ வந்தாய் காதல் கொடிதான் சுகமாய் பறக்குதே

நீ விழித்திடும் பார்வை என்னை எழுப்பிடத்தானோ
நீ விரல்கொண்டு வந்தால் நான் விலகிடுவேனோ
கீறல் உண்டான நெஞ்சத்தில்
புது தூறல் நீயே

BY ABDUL BACKI.K
DEAR GUYS

எழுதியவர் : (29-Nov-18, 12:41 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : kaadhal ALAIPITHAL
பார்வை : 87

மேலே