கண்கள் புரிந்துவிட்ட பாவம்

விட்டுப்பிரிகிறாய் நீ
என் மனம் என்னிடம்
பிறகேதும் பேசாமல்
வெட்டிக்கொண்டு மாய்ந்தது.
இதயம் துண்டாடிய
மூளையில் இருந்து
வந்தவண்ணமாய் இருக்கிறது
நம் சரித்திர புழுதி...
உன் நினைவுகள்
காடென கொழுத்து
என்னுள் வளர்ந்து
புதை சேற்றில் இறக்கிக்கொண்டது
நினைவுகளின் மாயமௌனங்களை.
நீ சென்ற பாதையில்
படிந்த என் பார்வைகளை
கழுகுகள் கௌவிப்போயின
பிணங்களின் மீது தூவி உண்ண.
இந்த நாளை
அரித்துக்கொண்டிருந்த நேரங்களில்
என் மரணம் மயானத்தில்
சீழ்க்கை ஒலியுடன்
குருடாக்கிக் கொண்டது.

எழுதியவர் : ஸ்பரிசன் (29-Nov-18, 3:51 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 208

மேலே