மறக்க முடியாத உன் நினைவுகள்

உன்னுடன் இருந்த அந்த அன்பான மற்றும் அழகான அந்த நேரங்கள் இன்று என்னை அழவைக்கின்றது...
என்னை அறியாமல் உன்மீது வைத்த அந்த பாசம் இன்று எனக்கு பாசக்கயிறாய் மாறி என்னை கொள்கிறது..
எதிர்காலத்தில் பிரிவோம் என்று தெரியாமல் சேர்ந்தோம், இன்று பிறிந்துவிட்டோம் இல்லை இல்லை பிரிக்கப்பட்டோம்...
பிரியும் முன் பலருக்கும் தெரியாத ஒன்று பிரிதல் அவ்வளவு எளிதான ஒன்று இல்லை என்று பிரிந்த பின் மனம் மீண்டும் சேர துடிக்கிறது..
ஆனால் உள்ளுக்குள் ஏதோ இனம் புரியாத ஒரு பயம்/கவலை என்னை வாட்டுகிறது.. ஏனென்றால் சீனத்து மீண்டும் பிரிந்து விடுவோமோ என்று..
தினம் தினம் உன் நினைவுகள் என்னை கொன்று கொண்டிருக்கிறது.. என் தூக்கத்தையும் வென்று கொன்றிருக்கிறது..

எழுதியவர் : இரா.பூவரசன் (29-Nov-18, 11:01 am)
சேர்த்தது : இராபூவரசன்
பார்வை : 3495

மேலே