கனிமுகம் மறைத்ததேனோ

கண்ணையும் காதணியையும்
காட்டி விட்டு உன் கனிமுகம்
மறைத்ததேனோ...
பொன்னகையும் புன்னகையும்
போட்டி போட உன் புன்னகை
ஜெயித்ததாலோ...
விண்ணிலும் மண்ணிலும்
தேடினேன் உன் கண்ணிசைவு
ஒன்றுக்காக...
கண்டிலேன் இதுவரை
உன் உருவம் கருணை தாராயோ
எனதன்புக்காக...