கதவுகளுக்கு பின் மறைக்கபடும் காதல் இதயங்கள்

மனசாட்சி இல்லாத மழலை இதயம்
வரைந்தக் கிறுக்கல் ஓவியம் "காதல்"..!!

மலைகளை போல காதல் கனவுகள் குவித்து...
கதவுக்கு பின்னே மறைப்பது ஏனோ!!..

உலைகளுகுள் கொதிக்கும் அரிசி போல..
உள்ளத்தை வேக வைப்பது ஏனோ....

பதினாறு வயசு தான் பருவ வயசு... பறந்து போகா காதல் இறக்கை புதுசு....
துடிப்பும் இருக்கும் துள்ளல் இருக்கும் காதல் மட்டும் தான் கவர்ந்து இழுக்கும்....

கண்கள் மட்டும் பார்த்து கொள்ளும்... கவிதை மொழிகள் பேசி கொள்ளும்...
இமைகள் நான்கும் அடித்து கொள்ளும்..
இதயம் ரெண்டும் துடித்து கொள்ளும்....
அழகை பற்றிய அக்கறை இல்லை...
அக்கம் பக்கம் யாரும் இல்லை..... அருகில் வர தயக்கம் இல்லை....

கல்வி பாடம் உள்ளே நடக்கும்...
காதல் பாடல் மட்டும் கேட்கும்.....

கண்கள் பார்த்து ரசிக்கும்....
கைகள் முதல் இரண்டு எழுத்தை மேசையிலே பொறிக்கும்....
இடைவேளை வந்த பின்பும் இருக்கை யோடு நெருக்கம்....
இரு கைககள் உடன் நடுக்கம்.....
புன்னகை செய்யும் உதடுகளை பூக்கள் என்று அழைக்கும்....


சாலையிலே சாரல் மழை....
இரு விழிகள் பேசும் விந்தை இதை....
தொடர்ந்து போவோம் தொலைந்து போவோம் பாதை மறந்து பறந்து போவோம்.....

நடந்து போக நான்கு நிமிடம்....
இதை கடந்து போக பல பொழுது போகும்....
முன்னும் பின்னும் பார்த்து போகும் ....முகத்தக் கொஞ்சம் காட்டி போகும்..
புத்தகத்தை மூடி கையில் வைத்து கொண்டு என்னதான் வாசிக்கும் அந்த இரண்டு கண்கள்.....

வீதீயோ சாதியோ பார்க்க தெரியாத பாழ்மனம்....பார்த்த உடன் பற்றி கொள்ளும் தீ இனம்......


எது காதல் பதினாறு?..
உடைத்து விடும் என்று தெரிந்து பார்க்கும் கண்ணாடி... "காதல்"

இது காதல் என்றே தெரியாமல் வரையும் கற்பனை ஓவியம் ...."காதல்"

உணர்வுகளை ஒலிபரப்பு செய்யும் ஊடகம்....."காதல்"

தண்ணீர் இருந்தும் தவிக்க வைக்கும் கானல் அருவி...."காதல்"

பனித்துளியை தேடும் எரிமலை..."காதல்"

மணம் வீசும் மல்லிகை தோட்டம்..."காதல்"


#தீனா

எழுதியவர் : தீனா (1-Dec-18, 2:21 pm)
சேர்த்தது : தீனா
பார்வை : 538

மேலே