அவள்
மஞ்சள் பூசிய
பொட்டு வைத்த
வட்ட வட்ட நிலவொத்த
வடிவான முகம்
அதில் துள்ளி விழும்
கயல்போல் கண்களிரண்டு
என்னைப்பார்த்து அபிநயம் புரிய
செவ்விதழும் மலர்கின்ற
ரோசாப்பூப்போல் காட்சிதர
சிறு புன்னகையும் அதில்
மின்னல்போல் தோன்றி மறைய
அப்போது கன்னங்கள் இரண்டில்
குழிகள் கண்டேன் - அதில்
என்னையும் கண்டபோதுதான்
உணர்ந்தேன் அந்த கன்னக்குழிகளுக்கு
என்னை அறியாது நான்
என்னையே பறிகொடுத்தேனே .