ஏழ்மை காலம்

அனுதினமும்
விடிந்திடும் காலை
இதுவரை
விடியாமல் இருப்பதேன்
ஏழை வாழ்க்கை?
விடியும் முன்னும்
விடிந்த பின்னும்
எழுந்து - தினம்
செய்கிறான் வேலை
அவன்
என்னதான்
முத்து முத்தாய்
வியர்வை சிந்தி
உழைத்தாலும்....
அவனுக்கு கிடைப்பதென்னவோ
பசி மட்டும்தான்
வறுமையோடு வாடினாலும்
பட்டினியோடு தூங்கினாலும்
ஏழை
ஏமாற்றுவதில்லை
எவரையும்...!
ஏழை
எங்களை
ஏமாற்றும் நீயோ
ஏன்?
எமனை ஏமாற்ற
உன்னால் முடியவில்லை?!
அப்பொழுது
உண்மை உணர
உனக்கு வாய்ப்பில்லை!
காரணம்
அது உனக்கு
போதாக்காலம்!