காதல் என்றால்
பார்த்து சிரிப்பதும்
பார்வையில் தொலைவதும்
காத்திருந்து ரசிப்பதும்
கனவுகளில் மிதப்பதும்
ஆசைகளை கூட்டுவதும்
ஏக்கங்களால் வாடுவதும்
கவிதை கிறுக்குவதும்
கிறுக்களை ரசிப்பதும்
பின்னால் சுற்றுவதும்
கண்டவுடன் ஒளிவதும்
தாடி வளர்ப்பதும்
தனிமையை மணப்பதும்
காதல் என்றால் ?
ஆம் காதலுக்கு
கண்
கால்
கை
வாய்
என
அனைத்தும் உண்டு
ஒன்றை தவிர
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள்
உங்களுக்குள்ளும் காதல் என்றால் ?