என் ஆசை மகனுக்கு முதல் கடிதம் 555

என் அன்பு மகனே...

என் அன்பு மகனே நீ உன் அம்மாவின்
வயிற்றில் எப்படி இருக்கிறாய்...

உன்னைக்கான நானும் உன்
அம்மாவும் தவம் இருக்கிறோம்...

என் ஆசை மகனே நீ உன்
அம்மாவின் வயிற்றில்...

இன்று நான்
அயல் நாட்டில்...

மருத்துவரின் முதல்
பரிசோதனைக்கு...

உன் அம்மாவிற்கு
துணையாக நான் வந்தேன்...

இனிவரும் மருத்துவ பரிசோதனைக்கு
துணையாக நான் இல்லாமல்...

உன் தாயும் நானும்
காதல் கரம் பிடிக்க...

சில ஆண்டுகள்
காத்திருந்தோம்...

எங்கள் காதல் வாழ்க்கை
திருமண வாழ்க்கையாக முடிந்தது...

ஆயிரம் பரிசுகள் திருமணத்திற்கு
எங்களுக்கு வந்திருந்தாலும்...

எங்கள் காதல் பரிசாக கிடைக்க
போவது நீதான்...

என் செல்ல மகனே நீ
மண்ணை தொடுமுன்...

நான் உன் தாயிடம்
வந்துவிடுவேன்...

உன்னை முதன் முதலில்
என் கைகளில் ஏந்த...

என் அழகு மகனே...

ஆயிரம் முத்தங்களுடன் உன் அன்பு
தோழனாகிய உன் அப்பா...

உனக்காக நான் கிறுக்கிய
முதல் கிறுக்கல் இது...

ஆசை மகனே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Dec-18, 9:46 pm)
பார்வை : 231

மேலே