காதல் மனம்

அன்பு காட்ட ஆளிருந்தாலும்
ஆறுதலாய் சாயத் தோளிருந்தாலும்
கண்ணீர் துடைக்கும் கைகள் இருந்தாலும்
கடுகளவும் வெட்கமின்றிக்
கருணையே இல்லாமல்
கண்ணெதிரே சாத்தப்பட்ட
கதவின் முன்னால் தான்
கலங்கும் விழிகளோடு
காலம் மறந்து
காத்துக் கிடக்கும்
மனம் - ஒரு குரங்கு...!
~ தமிழ்க்கிழவி.

எழுதியவர் : தமிழ்க்கிழவி (3-Dec-18, 8:25 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
Tanglish : manam oru kuranku
பார்வை : 685

மேலே