இயற்கைக் காதல்

தூக்கத்திலும் சிரித்தேனடி உனை நினைத்து
செடி ஒன்று முளைக்க வில்லையா
என் அன்பு விதை விதைத்து....
செஞ்சிலை ஒன்று வடித்தேனடி
கண்ணீரோடு வலியும் கூடுதே நீ
சென்றாயடி என் இருதயம் தைத்து...


மலைமீது படர்ந்திடும் மேகமாய்
உனை நாளும் தொடர்கிறேன்
உன் மூச்சுக்காற்றுப் பட்டு முழு வாழ்வின்
தாகத்தை தீர்த்து கொள்ள!
அருவியிலிருந்து விழும் நன்னீராய்
உனை நானும் பிரிகிறேன்
பிரிவு தந்திடும் அன்பை வாழ்வின்
எல்லை வரை கொண்டு செல்ல!


உணர்வில் கலந்து ,
உயிரில் சேர்ந்து,
காலம் தொடர்ந்து,
கடையில் அறிந்து,
நித்தம் கரைந்து ,
வலிகள் மறந்து,
கஷ்டம் மறைந்து,
காதல் மட்டும் நிறைந்ததின்
அர்த்தம் தெரியாததால் வழிகள் அறிந்தும்
உன் நினைவுகள் தந்த மாய உலகில்
சுற்றித் திரிகிறேன் கள்ளம் இல்லா உள்ளம் படைத்தவனாய்
காலம் முழுதும்...

மழை பேய்ந்த பின்பும்
இலையோடு தங்கும்
மழைநீராய் நானும்
என்னோடு நீயும்
எப்போதும் வேண்டும்

கரையோடு நீந்தும்
நத்தையாய் நானும்
என் வாழ்வின் நீளம்
வரை மெதுவாகத்தானே
நான் போக வேண்டும்

புல்லில் வீழ்ந்த பனித்துளியை ரசிக்க
இருவிழியது போதாது
சிந்திய நீரும் சிதையா எண்ணையும்
என்றும் ஒன்று சேராது

மறக்கிறேன் நானும் என்னை
உணர்கிறேன் உன்னில் என்னை

கண்ணுக்குள் ஒளித்து வைத்த
காகிதம் போல் நனைந்தது
என் ஆசைத் தாள்....

குற்றால அருவியின் ஓரம்
கற்றாழைப் பூவுஞ் சேரும்
நானும் நனைய சிறுதூரல்
என் மேல் வீழாதா?

எழுதியவர் : மணிகண்டன் (3-Dec-18, 8:30 pm)
சேர்த்தது : மணி ராக்ஸ்
Tanglish : iyarkaik kaadhal
பார்வை : 920

மேலே