முகநூல் தங்கை
முக நூல் என்னையும் என் தங்கையையும் இணைத்த தொப்பிள் கொடி
முகம் பார்த்து வரவேண்டிய சந்தோசங்களை முகநூலில் எனக்களிப்பவள்
அறியாத என்னிடம் அளவில்லா அன்பை தருகிறாள்
யார் என்றே தெரியாத என்னிடம் ரத்த உறவு போல துடிக்கிறாள்
இன்று நோய்களுக்கெல்லாம் பணம் தான் மருந்து என்ற சூழலிலும்
இவள் அன்பும் என் காயங்களுக்கு மருந்திடுகிறது
என் குடும்பத்தில் பெண் பிள்ளை இல்லை
இருந்தும் இவள் வருகைக்கு பின் பெண் பிள்ளை இல்லை
என்ற வார்த்தை சொல்ல மனம் வரவில்லை
உன்னை காணாத போதும் தங்கை பாசம் உணர்கிறேன்
சாப்பிடுங்கள் என்று மட்டும்
சொல்லவில்லை
உனக்காக சமைத்து கொண்டிருக்கிறேன்
வா அண்ணா என்பாய்
நீ என்னுடன் பிறக்கவில்லை
என்று யார் சொன்னார்கள்
இதோ என் உயிராக வாழ்கிறாய் ......