நார்த்தம் பழ கொங்கையாளே

நாவப்பழ கண்ணாளே
நாளும் சேதி சொன்னவளே
நாணம் அச்சம் பயிர்ப்பு என்ற
நவரச குணம் கொண்டவளே
நார்த்தம் பழ கொங்கையோடு
நர்த்தனம் ஆடிச் சென்றவளே
நனவிலும் கனவிலும் என்றும்
நனி காதல் தந்தவளே
நரம்பெல்லாம் நாடுதடி உனை
நாள்தோறும் நாவால் பேச

எழுதியவர் : நன்னாடன் (3-Dec-18, 7:08 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 114

மேலே