தமிழில் பெயர்கள் இல்லையா

ராமு : ஏண்டா சோமு, ஊரிலிருந்து உன் மகள்
கண்ணகி பிள்ளையோடு வந்திருக்கா போல இருக்கு ....
புள்ள பேரு என்னான்னு வெச்சிருக்கு கண்ணகி ?

சோமு : அத ஏங்க கேக்கறீங்க , நேத்து எனக்கும் என் மவளுக்கும்
என் பேரன் பெயரை குறிச்சு ஒரு சர்ச்சையே எழுந்துச்சிங்க ....
என் பேரனுக்கு என் மாப்பிள்ளையும் பெண்ணும் சேர்ந்து வெச்ச பெரு
ஆசிஷ் ரதன் ........ அதாவதுங்க , மாப்பிள்ளைக்கு நம்ம
கிரிக்கெட்டர் ஆசிஷ் நெஹ்ராவை ரொம்ப பிடிக்குமாம்
அதனால் அஷிஷ்ன்னு முதல் பெயராம், மாப்பிள்ளை அப்பா பெரு
முனிரத்தினம் .... அதில் ரத்தினத்தை மட்டும் எடுத்து அதையும்
சுருக்கி இந்தி வடிவம் தந்து ரத்தம் ஆக்கிட்டாரு .........
பேரன் பெரு ஆசிஷ் ரதன் ஆச்சுங்க இப்படித்தான்

ராமு : சர்தான் போ, போற போக்குல , இன்னும் சில வருடங்களில்
நம்ம தாய் தமிழ் நாட்டிலே மக்களுக்கு தமிழ் பெயர் தவிர
வேறு எல்லா மொழி பெயர்களும் இருக்கும் போல இருக்கே.....
என்னே நம் இளைய தலைமுறையினரின் தமிழ் பற்று
தமிழையே மறக்கும் பற்று ! பெயரளவில் கூட தமிழ் இங்கு
ஒதுக்கப்படுகிறதே .......................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Dec-18, 6:01 pm)
பார்வை : 88

மேலே