இவர்கள் தான் குடி மக்கள்

நாடு கெட்டுப் போச்சா ?
நாகரிகம் முற்றிப் போச்சா?
நாளையும் அறிந்து பார்த்து ?
நாட்டைத் திருத்த எடுக்கும் /
முயற்சியோ காட்டமான
நீர் ஊற்றி /
ஆட்டம் போடும் கன்னியர்களே /

கூண்டுப் பறவையாக /
வாழ்ந்த காலம் மாறிப் போச்சு/
கூட்டத்தார் முன்னே கும்மாளம் /
போடும் பெயர் பட்டியலிலே /
முன் இருக்கையோ குமரிகளே /
உங்கள் பெயராம் ./

பாரதி இருந்திருந்தால்
இன் நிலை கண்டு /
பாராங் கல்லில் முட்டி இருப்பார்
தன் தலை கொண்டு/

நாட்டுக்கும்
வீட்டுக்கும் குல தெய்வம் /
பெண்கள் தாங்க. /
இவர்கள் குடித்துக்
கெட்டால் மனம்
உண்டோ ?தாங்க/

பெண் அடிமை மீறி
கொஞ்சம் தலை தூக்க /
ஆண் அடிமை மெதுவாக
தலை சாய்கின்றது ../

குடி குடியைக் கெடுக்கும்/
இவை ஆண் மகனுக்கு
மட்டும் உகந்த பழமொழி /
குடி உன்னையே கெடுக்கும் /
இது பெண்ணுக்கான புது மொழி ./

தன்னையே மறப்பாய் /
கற்பை இழப்பாய் /
நாட்டுக்கும் வீட்டுக்கும் /
மறைக்க குப்பைத்
தொட்டியைத் திறப்பாய் ../

கன்னியாகவே நீ நடமாட /
தண்ணீரும் இன்றி /
குப்பையிலே சிசு மடிய. /
நினைக்கும் போதே வேதனை /
இது என்ன சோதனை ./

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (4-Dec-18, 7:28 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 68

மேலே