சராசரி --- நையாண்டி மேளம் 2

சராசரி.


மனைவியின் பேச்சு
மனதைத் தைக்காத வரை --

நான் சாந்தன்

பிள்ளையின் நடத்தை
நெஞ்சைக் குலைக்காத வரை --

நான் அஹிம்சைவாதி

என் நல முனைப்பு
கேள்வி கேட்கப்படாத வரை --

நான் பொது நலவாதி

அநியாயம் அநீதி
கோலோச்சாத வரை --

நான் நல்லவர் பக்கம்

நடைமுறை சமூகம்
புண்படுத்தாத வரை

நான் இலட்சியவாதி

சரி விவாதம் எதற்கு
ஒத்துக் கொள்கிறேன் --

நான் ஒரு சராசரி !

எழுதியவர் : Dr A S KANDHAN (5-Dec-18, 12:45 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 32

மேலே