உயிர் துகள்
உன்
உயிர் துகளை தேடிகிறேன்
நான்
ஆய்வு செய்ய விஞ்ஞானியும் அல்ல
போதிப்பதருக்கு மெய்ஞானியும் அல்ல
அழகிய இயற்கையை எல்லையாக பிரித்திருக்கும்
மனிதர்களில் எல்லைக்குட்படாத மனிதன்
நான்
ஆம்
நான்தான் உன் உயிர் துகளை தேடிகிறேன்
இயறக்கை என்னும் சாளரம் சிறைக்கம்பியானதால்
தேடிக்கிறேன்
நான்
தேடுவது உன்னை காப்பதற்காக அல்ல
உன்னை அழிப்பதற்காக
நீ அழிந்து பிறந்து வா
உன்னிலிருந்து எல்லா
உயிரனங்களையும் உருவாக்கு
மனிதனை தவிர ........