மனிதனே சால சிறந்தவன்

அழகான உடலைப் படைத்தாய்
அதனுள் இதயம் வைத்தாய்
அளவின்றி ருசிக்கும் நாவையும் வைத்தாய்
அளவோட புசிக்க அறைப் போன்ற வயிறு வைத்தாய்
ஆசைக் கொள்ள ஆர்ப்பரிக்கும் கண்ணை வைத்தாய்
அதை அடைய அடங்கா காலை வைத்தாய்
அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் மூளை வைத்தாய்
சூழ்ச்சி செய்து வீழ்ச்சியடைய எண்ணம் வைத்தாய்
நெறி பிறழ்ந்த நெஞ்சினறாய் வஞ்சிக்கும்
நெரிஞ்சு முள் மனிதரையும் வைத்தாயே - அவற்றால்
நேர்மை என்ன கண்டாய் இறையே … - எனினும்
உன்னிலும் வேறுபாடுகளை வினாவாய் எழுப்பி
பணம் என்னும் படைபலத்தால் உம் படைப்புகளையே
பலகீனமாக்கும் மனிதனே சால சிறந்தவன்.
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (6-Dec-18, 8:35 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 101

மேலே