சாப்பிடும்போது எழுதியது

எந்த வேலையிலும்
இல்லாத அவனுக்கு
புரியவேயில்லை
ஞாயிற்றுக்கிழமை என்பது.

*****
அக்காதல் கவிதையை
ரூபமிக்கத்தாய்
உனக்களிக்க வேண்டி
பென்சிலால் எழுதி எழுதி
ரப்பரால் அழித்து அழித்து
திருத்தி முடித்து
உன்னிடம் தருகையில் தெரிந்தது
ரப்பரால் எழுதி எழுதி
பென்சிலால் அழித்த வடுக்கள்.
*****

எந்த யுத்தத்திலும்
ஜெயிக்கவேயில்லை
நாடு என்பது......
****
இறுக்கச்சாத்தி மூடிய
ஜன்னலும் கதவும்
கண்கள் விரித்து பார்த்தன
முதலிரவு அறையில்.
****
சப்பாணி கொத்தனார்
பூவும் பிஞ்சும் தவிர்த்து
பரபரவென இலைகள் விலக்கி
கனி தேடும் அவஸ்தை...
அந்த வாசகன் கண்களில்
இக்கவிதை படவேண்டுமென்பதிலும்

எழுதியவர் : ஸ்பரிசன் (6-Dec-18, 7:20 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 145

மேலே